அலெப்போவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 50 பேர் பலி

  • 31 அக்டோபர் 2016

சிரியா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அலெப்போவின் மேற்கிலுள்ள சுற்றுப்புறங்களில், கடந்த மூன்று நாட்களாக கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் ஷெல் தாக்குதல்களில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நகரில் இருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption மேற்கு அலெப்போவிலிருற்து குடிமக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது

கொல்லப்பட்டோரில் இருபதுக்கு மேலோனோர் பெண்களும் குழந்தைகளும் என்று பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்குகிற சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.

சிரியாவின் ராணுவம் இறந்தோரின் எண்ணிக்கையை அதிகமாக தெரிவித்திருக்கிறது,

படத்தின் காப்புரிமை AFP
Image caption மேற்கு அலெப்போவில் மோட்டார் குண்டு தாக்குதல் நடத்த தயாராகும் கிளர்ச்சியாளர்கள்

அலெப்போவின் கிழக்கிலுள்ள புறநகர்களில் முற்றுகையை சந்தித்திருக்கும் கிளர்ச்சியாளர்கள், வெள்ளிக்கிழமை பெரியதொரு தாக்குதலை தொடங்கினர்.

திங்கள்கிழமையும் பல பகுதிகளில் மோதல்கள் தொடர்வதாக கூறப்படுகிறது.