நிலநடுக்க அச்சத்தால் இடம்பெயர்ந்து வாழ விரும்பும் இத்தாலியர்

  • 31 அக்டோபர் 2016

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இடைக்கால வரலாற்று நகரங்களையும் கிராமங்களையும் அழித்த, நிலநடுக்கத்திற்கு பிறகு, குறைந்தது 40 ஆயிரம் பேருக்கு உதவி வழங்கி வருவதாக இத்தாலியின் மத்திய பகுதி சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption நோர்ட்ச்சா நகர விளையாட்டு அரங்கில் மக்கள் பலர் தங்கவைப்பு

குறைந்தது 15 ஆயிரம் பேர் அரங்குகளிலும், பிற தற்காலிக உறைவிடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கின்ற துண்டிக்கப்பட்ட அல்லது சேதமடைந்த சாலைகளால் மீட்புதவி மற்றும் நிவாரண முயற்சிகள் தடைப்பட்டு வருகின்றன.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ரோமிலுள்ள புனித பால் பேராலயத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்

பாதிக்கப்பட்ட பகுதிகளை மீள்கட்டமைப்பது பற்றி விவாதிக்க இத்தாலி பிரதமர் மட்டயோ ரென்சி சிறப்பு அமைச்சவை கூட்டத்தை நடத்தவுள்ளார்.

அழிந்துள்ள கட்டங்கள் அனைத்தும் மீண்டும் கட்டியமைக்கப்படும் என்று அவர் உறுதி அளித்திருக்கிறார்.

ஆனால், ஆகஸ்ட் மாதம் தொடங்கி நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு விட்டதால், இங்கு வாழ்ந்தது போதும். வேறு இடங்களில் இடம்பெயர்ந்து வாழ விரும்புவதாக அந்நகர வாசிகள் பலர் பிபிசியிடம் தெரிவித்திருக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்