குடும்பத்தோடு இணைந்தனர் கடத்தப்பட்டிருந்த இந்தோனீஷிய மாலுமிகள் நால்வர்

சுமார் ஐந்தாண்டுகளாக சோமாலியவில் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த நான்கு இந்தோனீஷிய மாலுமிகள் அவர்களுடைய குடும்பத்தோடு மீண்டும் இணைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption விடுதலைக்கு பின்னர் கென்யா வந்த மாலுமிகள்

அவர்கள் பீதியும் அதிர்ச்சியும் அடைந்திருப்பதாவும், விடுவிக்கப்பட்டுள்ளதை இன்னும் நம்ப முடியாத உணர்வுடன் இருப்பதாவும் அதில் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

ஒரு வாரத்திற்கு முன்னால் சோமாலிய கடல் கொள்ளையரால் விடுவிக்கப்பட்ட 26 மாலுமிகளில் ஒரு குழுவினர் தான் இந்த நாவரும் ஆவர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption விடுவிக்கப்பட்ட மாலுமிகள்

2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர்களுடைய மீன்பிடி படகு இந்திய பெருங்கடலில் வைத்து கடத்தப்பட்டது.

அவர்களை விடுவிக்க ஒன்றரை மில்லியன் டாலர் வழங்க வேண்டும் என்று கடல் கொள்ளையர் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

இந்த குழுவிலுள்ள பல கம்போடிய மாலுமிகள் பலர் திங்கள்கிழமை தங்களுடைய குடும்பத்தினரை மீண்டும் சந்திக்க இருக்கின்றனர்

தொடர்புடைய தலைப்புகள்