மத்திய ஆஃப்ரிக்க குடியரசில் இன்றோடு முடிவுக்கு வரும் பிரெஞ்சு படையினரின் அமைதி காக்கும் பணி

  • 31 அக்டோபர் 2016

மத்திய ஆஃப்ரிக்கா குடியரசில் மூன்றாண்டுகளாக பிரெஞ்சு படையினரின் அமைதி காக்கும் பணி இன்றோடு முடிவடையும் நிலையில், தலைநகர் பாங்கீயில் நேற்று இரவு மோதல்கள் வெடித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

பதட்டம் நிறைந்த முஸ்லிம் மாவட்டமான பிகே 5 உள்ள போட்டி ஆயுதக் குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதில், குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இனப்படுகொலையைத் தடுக்கும் நோக்கில் அமைதி காக்கும் பணியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளதாக பாங்கீயில் உள்ள பிரெஞ்சு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷாங் ஈவ் லி டிரியாங் கருத்து தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரெஞ்சு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷாங் ஈவ் லி டிரியாங்

தற்போது, இனி பாதுகாப்பு பணி வலிமையான 10 ஆயிரம் ஐக்கிய நாடுகள் படையினரிடம் ஒப்படைக்கப்படும்

எனினும், மேலும் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, ஐ.நா படை வலுவிழந்த நிலையில் உள்ளது என்று பரலாக கருதப்படுவதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்