தீவிர பண நெருக்கடியை சமாளிக்க பத்திர தாள்களை அறிமுகப்படுத்தும் ஜிம்பாப்வே அரசு

ஜிம்பாப்வேயில் ஏற்பட்டுள்ள தீவிர பண தட்டுப்பாடு நெருக்கடியை போக்கும் முயற்சியாக ஒரு புதிய வடிவிலான பணத்தை அந்நாட்டு அரசு வெளியிட உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தீவிர பண நெருக்கடியை சமாளிக்க பத்திர தாள்களை அறிமுகப்படுத்தும் ஜிம்பாப்வே அரசு

ஜிம்பாப்வேயின் தேசிய ரிசர்வ் வங்கியானது, 'பத்திர தாள்கள்' என்று அது வர்ணிக்கும் புதிய வடிவிலான பணத்தை அச்சடிக்கத் தொடங்கி உள்ளது.

அமெரிக்க டாலருக்கு இணையான மதிப்பை இந்த பத்திரங்கள் கொண்டிருக்கும்.

மேலும், ஆஃப்ரிக்க ஏற்றுமதி - இறக்குமதி வங்கியிலிருந்து சுமார் 200 மில்லியன் டாலர் கடன் இந்த பத்திரங்களுக்கு ஆதரவளிக்கும்.

இனி வரும் வாரங்களில் பத்திர தாள்கள் அறிமுகப்படுத்துவது பற்றிய பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் இன்று தொடங்குகிறது.

ஏழு ஆண்டுகளுக்குமுன், ஜிம்பாப்வேயில் ஏற்பட்ட அதீத பண வீக்க நெருக்கடியை நினைவுபடுத்தும் பலர் இந்த திட்டத்தை சந்தேகத்துடன் பார்ப்பதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்