பெண்கள் கருத்தடை சாதன இலக்குகள் எட்டப்படவில்லை

ஏழை நாடுகளில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள்,நவீன கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதை அதிகரிக்க நடந்த ஒரு சர்வதேச பிரச்சாரம் தனது இலக்கை எட்டுவதில் தோல்வி அடைந்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உச்சி மாநாட்டுக்குப் பிறகு, 30 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு கருத்தடை சாதன வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன எனக் குடும்ப கட்டுப்பாடு 2020 என்ற திட்டத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஐ.நா.வால் ஆதரவளிக்கப்படும் இந்த அமைப்பு, 2020ம் ஆண்டு வாக்கில், மேலும் கூடுதலாக 120 மில்லியன் நபர்களுக்கு இந்தக் கருத்தடை சாதனங்களை அளிப்பது என்ற இலக்கைக் கொண்டிருந்தது.

ஆசிய நாடுகளில் கருத்தடை சாதனங்களுக்குத் தேவை அதிகமாக உள்ளது. மற்றும் கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் முன்னேற்றம் உள்ளது.

ஆனால் , மேற்கு ஆப்பிரிக்காவில் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவது மிகவும் மெதுவாகவே செயல்பட்டிருக்கிறது.

தற்போதும், குடும்ப கட்டுப்பாடு சேவைகளைப்பெற இயலாத நிலையில் தான் ஏழை நாடுகளில் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட பெண்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.