மொசூல் நகரில் நுழைவதில் இராக் முன்னேற்றம்

  • 1 நவம்பர் 2016

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் மொசூல் நகரை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக அந்நகரில் காலூன்றுவதில் முன்னேற்றம் கண்டுள்ள இராக் அதிரடி படைப்பிரிவுகள், அந்நகர் புறங்களுக்குள் நுழைந்துள்ளன.

படத்தின் காப்புரிமை EPA

ஏவுகணை, மோட்டார், துப்பாக்கி மற்றும் இயந்திர துப்பாக்கிகளை பயன்படுத்தி இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் கடும் எதிர்ப்பை காட்டி வருவதாக போரிடுகின்ற ஆயுதம் தாங்கிய வாகனத்தில் பயணித்து செல்லும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ஆனால், முன்னேறி சென்றுள்ள அதிரடி படையினர் கிழக்கு பக்கம் இருக்கும் அரசு தொலைக்காட்சி கட்டடத்தை கைப்பற்றியிருப்பதாக கூறுகின்றனர்.

சில குடிமக்கள் வெள்ளை கொடிகளை அசைத்து கொண்டு காணப்பட்டனர்

தொடர்புடைய தலைப்புகள்