25 ஆயிரம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்த ஐ.எஸ். முயற்சி

மொசூலின் தென் பகுதியில் இஸ்லாமிய அரசு என்று அழைத்துக்கொள்ளும் அமைப்பால் செய்யப்பட்டுள்ள கொலைகள் மற்றும் கடத்தல்கள் பற்றிய புதிய தகவல்கள் வந்துள்ளன.

Image caption இஸ்லாமிய அரசு தனது நடவடிக்கை மையங்களுக்கு அருகில் குடிமக்களை அமர்ந்தும் வகையில் ஈடுபடுகிறது

முன்னாள் இராக் ராணுவத்தினர் 40 பேரை சனிக்கிழமை கொன்ற தீவிரவாதிகள், அவர்களின் உடலை டைக்கிரிஸ் நதியில் வீசியுள்ளதாக தனக்கு தகவல் வந்துள்ளதாக ஐநா தெரிவிக்கிறது.

ஒரு புறநகரிலிருந்து 25 ஆயிரம் குடிமக்களை மொசூலுக்கு இடம்பெயர செய்து, மனித கேடயங்களாக பயன்படுத்த ஐ.எஸ் அமைப்பு முயற்சித்ததாகவும் ஐநா தெரிவிக்கிறது.

இந்த நடவடிக்கை அமெரிக்க தலைமையிலான கூட்டணி போர் விமானங்களால் சீர்குலைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

இஸ்லாமிய அரசு தனது நடவடிக்கை மையங்களுக்கு அருகில் குடிமக்களை அமர்ந்தும் வகையில் அத்தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளதை கவனித்திருப்பதாக ஐநா கூறியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்