மோரோக்கோவில் போராட்டங்களை தூண்டிய மீன் வியாபாரியின் கொலையில் 11 பேர் கைது

மொரொக்கோவில், மீன் விற்பனையாளர் ஒருவரின் இறப்போடு தொடர்புடைய 11 பேரை கைது செய்திருப்பதாக அந்நாட்டு ஆட்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ரபாத் நகரில் நடைபெற்ற போராட்டம்

இந்த இறப்பு பல நகரங்களில் பெரிய அளவிலான போராட்டங்களை தூண்டியிருந்தது.

தற்செயலான கொலை மற்றும் பொது ஆவணங்களை போர்ஜரி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மீன் விற்பவரின் இறப்பை தொடர்ந்து பல நாட்களாக ஆயிரக்கணக்கான மோரொக்கோ மக்கள் போராட்டம் நடத்தினர்

காவல்துறையினர் மீனை பறித்து, தூக்கி போட்ட குப்பை லாரியில் இருந்து மீன்களை மீட்டெடுக்க முயன்றபோது, அந்த லாரியால் நசுக்கப்பட்டு மீன் விற்பவரான மோக்சின் ஃபிக்ரி உயிரிழந்தார்.

அந்த வண்டியில் இருந்த குப்பைகளை நசுக்கும் வசதியை இயக்க ஒரு காவல்துறை அதிகாரி ஆணையிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டில் அரபு வசந்தம் ஏற்பட்டதிலிருந்து காணப்படாத பெரிய அளவிலான போராட்டங்களை இந்த சம்பவம் மோரோக்கோவில் தூண்டியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்