இராக் எல்லையில் துருக்கி ஆயுதங்கள் குவித்து தயார் நிலை

  • 1 நவம்பர் 2016

இராக்கின் எல்லைக்கு மிகவும் நெருக்கமாக டாங்கிகளையும், போர் தளவாடங்களையும் துருக்கி நிறுத்தி வைக்க தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை Rex Features
Image caption இராக்கிலுள்ள துருக்கிய சமூகத்தினர் துருக்கி நாட்டின் இன அடிப்படையில் தொடர்புடையவர்

மிக விரைவாக மாறுபடுகின்ற ராணுவ சூழ்நிலைகளால் கவலையடைந்திருக்கிற துருக்கி, எல்லை கடந்து நிகழ்கின்ற சம்பவங்களுக்கு பதில் நடவடிக்கையாக இதனை மேற்கொள்வதாக தெரிவித்திருக்கிறது.

பயங்கரவாதக் குழு என்று துருக்கி கூறுகின்ற குர்து இன பிகேகே அமைப்பு, இராக்கின் வட பகுதியில் அதிக அளவில் செல்வாக்கு பெற்றுவிடும் என்று துருக்கி கவலையடைகிறது,

இராக் அரசோடு கூட்டணியில் இருக்கும் ஒழுங்கற்ற ஷியா முஸ்லீம் ஆயுதக்குழுவினரால், இராக்கில் வாழும் துருக்கி சமூகத்தினர் அச்சுறுத்தப்படுவர் என்றும் துருக்கி கவலையடைகிறது.

இராக்கிலுள்ள இந்த சமூகத்தினர் துருக்கியோடு இன அடிப்படையில் தொடர்புடையவர்கள்.

தொடர்புடைய தலைப்புகள்