செளதி அரச குடும்ப இளவரசருக்கு சிறையில் சவுக்கடி தண்டனை

செளதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு மற்றுமொரு இளவரசருக்கு, அதிகாரபூர்வ தண்டனையாக சிறையில் சவுக்கடிகள் வழங்கப்பட்டன என செய்திகள் தெரிவிக்கின்றன.

Image caption செளதியின் தற்போதைய அரசர் சல்மான்

இளவரசரின் அடையாளமோ அல்லது அவர் புரிந்த குற்றங்கள் பற்றிய தகவல்களோ இதுவரை வெளியிடவில்லை.

இந்த நிகழ்வு அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவும் இல்லை.

ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இருக்கும் சவுதி அரசக் குடும்பத்தில் இம்மாதிரியான நீதிமன்ற தண்டனையை எதிர்க்கொள்வது அரிதான ஒன்று.

இஸ்லாமிய சட்டம் அனைவரையும் ஒரே மாதிரி நடத்துகிறது என்று கூறி சவுதி அரேபியாவில் உள்ள சில சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்