சோமாலிய கடற்பகுதியில் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை குறைக்க ஜப்பான் கடற்படை திட்டம்

கடந்த சில ஆண்டுகளில் சோமாலிய கடற்கரை பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் கடற் கொள்ளை தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளதால், அவ்விடத்தில் தனது கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகளின் அளவினை குறைத்துக் கொள்ள ஜப்பானிய கடற்படை திட்டமிட்டு வருகிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption சோமாலிய கடற்கரை பகுதியில் கடற் கொள்ளை தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளன

இந்திய பெருங்கடலில் பாதுகாப்பு பணியில் உள்ள தனது இரண்டு அழிகலன்களில், ஒன்றினை தங்கள் நாட்டை நோக்கி , இந்தியப் பெருங்கடலுக்கு நகர்த்தவுள்ளதாக ஜப்பானின் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கடற்படை ரோந்து நடவடிக்கைகள் மற்றும் கடற்பகுதியில் உள்ள கப்பல்களில் ஆயுதம் தாங்கிய தனியார் பாதுகாப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளது ஆகியவை சோமாலிய கடற்பகுதியில் கடற்கொள்ளை குறைந்ததற்கான காரணங்களாகும்.

பாதுகாப்பு அம்சங்களின் அளவுகள் குறைந்து விட்டால், மீண்டும் கடற்கொள்ளை தாக்குதல் சம்பவங்கள் அதிகரிக்க கூடும் என்று கடற் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்