எவெரெஸ்ட் ஏரியின் ஆபத்து எப்படி தவிர்க்கப்பட்டது?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

எவெரெஸ்ட் ஏரியின் ஆபத்து எப்படி தவிர்க்கப்பட்டது?

எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகே இருக்கும் மிக ஆபத்தானதொரு ஏரியின் நீரை வெளியேற்றுவதில் வெற்றி பெற்றிருப்பதாக நேபாள இராணுவம் அறிவித்துள்ளது.

உலகின் மிக உயரமான பகுதியில் முன்னெடுக்கப்படும் நீர்வடிகாலமைப்பை கட்டும் நடவடிக்கையாக அதிகாரிகள் இதை வர்ணித்துள்ளனர்.

ஏரிக்கு கீழே வசிப்பவர்களை பாதுகாக்கவும் வெள்ளபாதிப்பைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை அவசியம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வடிகாலமைப்பு உருவாக்கப்பட்டது தொடர்பான பிரத்யேக காட்சிகளை நேபாள அரசிடமிருந்து பிபிசி பெற்றிருக்கிறது.