துனிஷிய புரட்சி மொரொக்கோவில் மீண்டெழுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

துனிஷிய புரட்சி மொரொக்கோவில் மீண்டெழுகிறதா?

மொரொக்கோவின் மீன் விற்பவரின் கொலை தொடர்பாக இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவரது வன்முறையான மரணம், நாட்டின் பல்வேறு நகரங்களில் மிகப்பெரும் ஆர்பாட்டங்களை தோற்றுவித்திருக்கிறது.

அதிகரித்துவரும் வேலையின்மை, ஏழ்மை மற்றும் அநீதிக்கெதிரான கோபம் ஆகியவை நாட்டில் மோதல் சூழலை அதிகரிக்கலாம் என்னும் அச்சங்கள் எழுந்துள்ளன.

2011 ஆம் ஆண்டு துனிஷிய தெருவோர வியாபாரி தன் சரக்குகளை அதிகாரிகள் கைப்பற்றியபோது தீக்குளித்து இறந்ததை தொடர்ந்து உருவான நிகழ்வுகள் மொரொக்கோ அதிகாரிகளை கவலைகொள்ளச்செய்திருக்கிறது.

அந்த தற்கொலை, மொரொக்கோ உட்பட வட ஆப்ரிக்கா நெடுகிலும் மிகப்பெரிய அரச எதிர்ப்பு கிளர்ச்சிக்கு தோற்றுவாயாக அமைந்தது.

அதன் பின்னர் பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மொரொக்கோ ராஜகுடும்பம் அரசாங்கத்துக்கு மேலதிக அதிகாரங்களை கையளித்தது.

அது நடந்து ஐந்தாண்டுகள் கழித்து, இந்த சம்பவத்தில் 11 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பது மொரொக்கோவில் புதிதாக உருப்பெரும் கோப அலையை குறைக்க உதவக்கூடுமென அதிகாரிகள் நம்புகிறார்கள்.