நைஜீரியாவில் 500 பணியிடங்களுக்கு லட்சக்கணக்கில் குவிந்த விண்ணப்பங்கள்

  • 3 நவம்பர் 2016

நைஜீரியாவின் வரி அலுவலத்தில் இருக்கும் 500 பணியிடங்களுக்கு ஏழரை லட்சம் பணி விண்ணப்பங்களை தாங்கள் பெற்றுள்ளதாக நைஜீரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நைஜீரிய அதிபர் புஹாரி

அதில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் முதல் வகுப்பு பட்டதாரிகள்; சில ஆண்டுகளாக நைஜீரியா, மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் போராடி வருகிறது.

நைஜீரியாவில் 13 சதவீத வேலையில்லாமை நிகழ்வதாக அதிகாரப்பூர்வ புள்ளி விவரம் தெரிவிக்கிறது ஆனால் உண்மையான எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

அதிகரித்துவரும் வேலையில்லா இளைஞர்கள், வடக்கில் இஸ்லாமியவாத எழுச்சியை தூண்டுவதாகவும் எண்ணெய் வளம் மிக்க தெற்கு பகுதியில் தீவிரவாதத்தை புதுப்பித்து வருவதாகவும் பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.