மொசூல்: மோசமான போரின் பிபிசி சாட்சியம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மொசூல்: மோசமான போரின் பிபிசி சாட்சியம்

மோசூலுக்குள் நடக்கும் போர் உக்கிரமடைந்திருக்கிறது.

கடுமையான போராட்டத்துக்குப்பின் இராக்கிய இராணுவம் மொசூலுக்குள் நுழைந்ததருணம் இது.

ஐஎஸ் அமைப்பு இந்நகரைக் கைப்பற்றி சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து இது சாத்தியமாகியிருக்கிறது.

இந்நகரை மீளக்கைப்பற்றுவதற்கான மோதல் மிக மோசமானதாக இருந்தது. இராக் இராணுவம் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது.

இராக்கிய படைகளோடு பிபிசியின் இயன்பேன்னல் ஒளிப்பதிவாளர் டாரன்கான்வே பயணிக்கின்றனர்.

இவர்கள் மொசூல் புறநகருக்குள் நுழைந்தபோது நாலாபுரமும் கடுமையான சண்டைகள் நடந்தன.

"மொசூல் நகரின் புறநகரப்பகுதிகளிலேயே பயங்கரவாத எதிர்ப்பு படையினர் பயணிக்கின்றனர்......கடந்த சில மணிநேரமாக இராக்கிய படையினர் கடுமையான எதிர்ப்பை சந்திப்பதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம்", என்கிறார் பிபிசி செய்தியாளர்.

"ஏராளமான ஐசிஸ் படையினர் ராக்கெட்டில் பொருத்தப்பட்ட கிரெனெடுகளை தாங்கியபடி எங்களை சுற்றி செல்வதையும் காண்கிறோம். எங்களை நோக்கிய தாக்குதல்களையும் பார்க்கிறோம்"

"ஏராளமான துப்பாக்கிச்சூடுகள். எங்கு திரும்பினாலும் கண்ணிவெடிகள் ஆபத்து நிறைந்த பூமியில் நிற்கிறோம்"

"இவையனைத்தும், இறுதி யுத்தம் எவ்வளவு கடினமாகவும் மோசமாகவும் இருக்கப்போகிறது என்பதைக் காட்டுவதாக இருக்கிறது", என்கிறார் பிபிசி செய்தியாளர்.