இஸ்லாமியர்களை நிந்தித்ததாக ஜகார்த்தாவில் ஆளுநருக்கு எதிரான போரட்டம்

  • 4 நவம்பர் 2016

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவின் ஆளுநர் இஸ்லாமியர்களை நிந்தித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்காக அவரைக் கைது செய்யக் கோரி பத்தாயிரக்கணக்கான முஸ்லீம் போராட்டக்காரர்கள் ஜகார்தாவின் மத்திய பகுதியில் கூடியிருந்தனர்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் நடைபெற்ற போராட்டம்

ஜகார்த்தாவின் ஆளுநர் பஸுகி சிஹா பர்நாம ஒரு கிறிஸ்துவர் மற்றும் சீன இனத்தைச் சேர்ந்தவர். அஹோக் என்ற பெயரில் அறியப்படும் அவர், எதிர்க் கட்சியினர் குரானில் உள்ள வசனங்களைப் பயன்படுத்தி தன்னைத் தாக்கி, வாக்காளர்களை ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்தார்.

அவர் தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். அவரது கருத்துக்களை போலிசார் விசாரணை செய்துவருகின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images

ஜகார்த்தாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில், இரண்டு இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு எதிராக அஹோக் நிறுத்தப்படும் நிலையில், அரசியல் மற்றும் இனம் சார்ந்த அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.