மொசூலில் ஐ.எஸ் அட்டூழியம்: சான்றுகள் உள்ளதாக ஐ.நா. தகவல்

  • 4 நவம்பர் 2016

மொசூல் நகரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஐ.எஸ். அமைப்பு நிகழ்த்திய அட்டூழியங்கள் பற்றி மேலும் பல சான்றுகள் உள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஐ.எஸ். தனது படையினர் சுமார் ஐம்பது பேரை கைவிட்டுச் செல்வதற்காக சுட்டுக்கொன்றது என செய்திகள் வெளியாகியுள்ளன என ஐ.நா.வின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

180 அரசு ஊழியர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

மனித கேடயங்களாக பயன்படுத்தும் சாத்தியத்திற்காக, ஐ.எஸ். 1,000க்கும் மேற்பட்ட பொது மக்களை டல் ஆஃபர் நகரத்திற்கு நகர்த்தியுள்ளது என்ற தகவல்களை தான் பெற்றுள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது .

பல குடும்பங்கள் தங்களது குழந்தைகளில் குறைந்தது ஒன்பது வயதுள்ள ஆண் குழந்தைகளை ஐ.எஸ். படையில் கட்டாய ஆட்சேர்ப்புக்காக அனுப்புமாறு கூறப்பட்டனர் என மேலும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.