அலெப்போ நகரில் சிரியா மற்றம் ரஷ்யா தாற்காலிக போர் நிறுத்தம் கடைபிடிப்பு

சிரியாவில் உள்ள அலெப்போ நகரில் போராளி படையினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் மாவட்டங்களிலிருந்து வெளியேற ரஷ்யா மற்றும் சிரியா அரசு படைகள் அலெப்போ நகரில் தாற்காலிக போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அலெப்போ நகரில் சிரியா மற்றம் ரஷ்யா தாற்காலிக போர் நிறுத்தம் கடைபிடிப்பு

ஆனால், இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை போராளிகள் நிராகரித்துள்ளனர். மேலும், தொடர்ந்து எதிர் தாக்குதலை தொடுத்து வருகிறார்கள்.

அலெப்போ நகரில் நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தங்கள் கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ள மாவட்டங்களை மீண்டும் கைப்பற்ற அரசு தீர்மானித்துள்ளதாகவும், அதே சமயம் போராளிகளும் நகரத்தில் மீதான தங்கள் பிடியை தளர்த்துவதற்கு தயாராக இல்லை என்றும் பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலையுடன் போர் நிறுத்த ஒப்பந்தமானது முடிவடைவதால், போராளிகள் வசமுள்ள பகுதிகளில் ரஷ்யா மற்றும் சிரியா ராணுவ விமானங்கள் குண்டுத் தாக்குதல்களை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்