அமெரிக்கா-மெக்ஸிகோ தடுப்புவேலியின் அவலம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்கா-மெக்ஸிகோ தடுப்புவேலியின் அவலம்

  • 4 நவம்பர் 2016

அமெரிக்காவில், செவ்வாய்க்கிழமை நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக இதுவரை முடிவு செய்யாத வாக்காளர்களை கவர ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் முயற்சிக்கிறார்கள்.

இரு வேட்பாளர்களும் இதுவரை நிலைமை தெரியாத மாநிலமான வடக்கு கரோலினாவில் நேற்று பிரச்சாரம் செய்தனர். தனது கணவர் அமெரிக்காவை பாதுகாப்பான மற்றும் பெருமை மிக்க இடமாக மாற்றுவார் என்று டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியா பேசியுள்ளார்.

பிரச்சாரங்களில் பதிவுசெய்யப்படாத குடியேறிகளின் விவகாரம் மிகவும் சர்ச்சைக்குரியதாக பார்க்கப்படுகின்றது. மெக்ஸிக்கோ நாட்டு எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.

ஆனால், அங்கு உண்மையில் ஏற்கனவே தடுப்பு வேலி இருக்கின்றது. மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தையும் அது ஏற்படுத்தியுள்ளது.