ஜகார்த்தா வன்முறை மோதல் எதிரொலி, அதிபரின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து

வெள்ளிக்கிழமையன்று தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற வன்முறை போராட்டங்களைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய பயணத்தை இந்தோனீஷிய அதிபர் ஜோக்கோ விடோடோ ரத்து செய்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தெய்வ நிந்தனை குற்றச்சாட்டிற்காக ஜகார்த்தாவின் ஆளுநரை கைது செய்ய கோரி ஆர்பாட்டம்

நாட்டிலுள்ள பாதுகாப்பு சூழ்நிலையால், விடோடோ நாட்டில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

காவல்துறையினருக்கும், பெரும்பாலும் அமைதியாக நடைபெற்ற பேரணிக்கு பின்னர் கலைத்து செல்ல மறுத்துவிட்ட முஸ்லிம் கடும்போக்குவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நாட்டிலுள்ள பாதுகாப்பு சூழ்நிலையால், அதிபர் நாட்டில் இருக்க வேண்டியுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவிப்பு

இந்த மோதல்களுக்கு அரசியல்வாதிகள்தான் காரணம் என்று வெள்ளிக்கிழமை மாலையில் வழங்கிய தொலைக்காட்சி உரையில், விடோடோ குற்றம்சாட்டியுள்ளார்.

தெய்வ நிந்தனை குற்றச்சாட்டிற்காக ஜகார்த்தாவின் ஆளுநரை கைது செய்ய ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்