லிபியாவில் கடத்தப்பட்ட 2 இத்தாலியர் உள்பட மூவர் விடுவிப்பு

செப்டம்பர் மாதம் லிபியாவில் கடத்தப்பட்ட 3 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு இத்தாலிக்கு விமானம் மூலம் வந்திருப்பதாக இத்தாலி அரசு தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption விமான நிலைய பராமரிப்பு பணியில் ஈடுபடும் இத்தாலிய நிறுவனத்தில் தொழில்நுட்ப பணியாளர்களாக அவர்கள் வேலை செய்தனர்

உள்ளூர் லிபிய ஆட்சியாளர்களோடு மேற்கொண்ட ஒத்துழைப்பின் விளைவாக இரண்டு இத்தாலியரும் ஒரு கனடா நாட்டவரும் இரவு நேரத்தில் விடுவிக்கப்பட்டதாக இத்தாலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இத்தாலியர்களான டனிலோ கலோனிகோவும், புரூனோ கக்கசியேவும், கனடாவின் பிராங் போசியாவும் லிபியாவின் தென் மேற்கில் அமைந்துள்ள காட் நகரத்தில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டனர்.

விமான நிலைய பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஒரு இத்தாலிய நிறுவனத்தில் இந்த மூன்று தொழில்நுட்ப பணியாளர்களும் வேலைசெய்து வந்தனர்.

இவர்களை விடுவிப்பதற்கு பிணைத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கையோ, பொது வேண்டுகோளோ வைக்கப்படவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்