நைஜீரியாவில் போகோ ஹராம் ஜிஹாதிகளால் கடத்தப்பட்ட சிபொக் பள்ளி மாணவிகளில் ஒருவர் கண்டுபிடிப்பு

நைஜீரியாவில் இரு ஆண்டுகளுக்குமுன் போகோ ஹராம் ஜிஹாதிகளால் கடத்தப்பட்ட சிபொக் பள்ளி மாணவிகளில் மேலும் ஒருவரைக் கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

கேமரூன் உடனான எல்லைப்பகுதி அருகே சாம்பிஸா என்ற காட்டுப்பகுதியில் இஸ்லாமியவாதிகளிடமிருந்து தப்பிய கைதிகள் குழுவில் இந்த பெண் இடம் பெற்றிருந்ததாக ராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த காட்டுப்பகுதியை ராணுவம் சோதனையிட்ட போது, 10 மாத ஆண் குழந்தையுடன் இந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள சிபொக்கில் உள்ள பள்ளியிலிருந்து கடத்தப்பட்ட 250க்கும் மேற்பட்ட மாணவிகளில் இவரும் ஒருவர்.

கடந்தமாதம், கடத்தப்பட்டவர்களில் 21 பேர் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், சுமார் 200 பேர் இன்னும் பிணைக் கைதியாகவே உள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்