ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு பெற்ற ஆஃப்கன் சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி

ஆஃப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் கடந்த வியாழக்கிழமையன்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களின் விளைவாக, பொதுமக்கள் பலியாகி இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அங்குள்ள அமெரிக்க படைகளின் தளபதி கருத்து தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை MARWAN NAAMANI
Image caption கோப்புப்படம்

குண்டூஸ் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தாலிபன் எதிர்ப்பு நடவடிக்கையின் போது, அமெரிக்க ஆதரவு பெற்ற ஆஃப்கன் சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில், குறைந்தது பாதி பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தாலிபன் அமைப்பை சேர்ந்த தளபதிகளும், 3 ஆஃப்கன் மற்றும் இரண்டு அமெரிக்க படையினரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்புகளுக்கு வருந்துவதாகவும், இதுகுறித்த அமெரிக்க - ஆஃப்கன் கூட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் அமெரிக்க தளபதி ஜெனரல் ஜான் நிக்கோல்சன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்