ஜெர்மனியில் அகதிகள் மீது தாக்குதல்: 3 பேர் காயம்

  • 6 நவம்பர் 2016

ஜெர்மனியின் ஹைடனவ் நகரில் நடைபெற்ற தாக்குதலில் மூன்று அகதிகள் காயமடைந்துள்ளனர்; ஒரு வருடத்திற்கு முன்பு வலது சாரி தீவிரவாதிகளல் அங்கு பலநாட்கள் வன்முறை போராட்டங்கள் நடத்தப்பட்டன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

முப்பது பேர் கொண்ட குழு ஒன்று, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பதின்ம வயதைக் கொண்ட அம்மூவரை நோக்கி அவதூறாக பேசினர்; பின்பு அவர்களை தாக்கவும் செய்தனர் இது குறித்து போலிஸார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து பேசிய ஹைடனவ்வின் மேயர் ஜுர்ஜென் ஒபிடிஸ், இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்; ஆனால் தனது நகரில் நிறவெறிப் பிரச்சனை நிகழ்வதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

ஜெர்மனி முழுவதும் தினந்தோறும் நிறவெறி நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.