புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் பல்கேரிய மக்கள்

பல்கேரியாவில் ஆளும் மத்திய-வலது சாரி கட்சியின் வேட்பாளர் மற்றும் ரஷியாவுடன் நெருங்கிய உறவுக்கு ஆதரவளிக்கும் முன்னாள் சோஷலிச ஜெனரல் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவும் அதிபர் தேர்தலில் அந்நாட்டு மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிபர் வேட்பாளர் ஸெட்ஸ்கா சசேவா

முதற்சுற்று வாக்குப்பதிவில் 19 வேட்பாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அது, முன்னனியில் இருக்கும் இரண்டு வேட்பாளர்களான ஸெட்ஸ்கா சசேவா மற்றும் ரூமர் ராதேவ் ஆகியோர் ஒரு வார காலத்திற்குள் இரண்டாம் சுற்றில் போட்டியிட வித்திடும்.

பிரதமர் போய்கோ போரீஸோவின் நெருங்கிய கூட்டாளியான சசேவா வெற்றி பெற்றால், நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெறுவார்.

மாறாக அவர் தோற்றுவிட்டால் அது பொதுத் தேர்தலுக்கும், புதுப்பிக்கப்பட்ட அரசியல் கொந்தளிப்பிற்கும் தூண்டுதலாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.