ரஷ்யாவில் எரிவாயு வெடிப்பினால் 6 பேர் பலி

ரஷ்யாவில் ஒரு அடுக்ககவளாகத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பினால், நான்கு வயது பெண் குழந்தை உள்பட 6 பேர் பலியானதாக அந்நாட்டின் அவசரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கோப்புப் படம்

ரஷ்ய தலைநகரான மாஸ்கோவுக்கு வட கிழக்கில் உள்ள இவானோவோ நகரில் ஏற்பட்ட இந்த எரிவாயு வெடிப்பினால், இரண்டு மாடி அடுக்ககம் ஒன்று சரிந்து விழந்தது.

கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்த எட்டு பேரை உயிருடன் மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கட்டட இடிபாடுகளுக்கு இடையே உயிருடன் இருப்பவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்