தென் கொரியாவில் அதிபரின் நெருங்கிய தோழி செல்வாக்கு செலுத்திய விவகாரத்தில் மேலும் இருவர் கைது

அரசியல் சர்ச்சை ஒன்றில் சிக்கிய தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹையின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்த இரு முன்னாள் உறுப்பினர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹை

அதிபரின் ஆலோசகரும் மற்றும் நீண்ட கால தோழியுமான சோய் சூன் - சில்லுக்கு நிதி வழங்க நிறுவனங்களுக்கு நிர்பந்தம் கொடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அரசு ஆவணங்களை சோய் சூன் - சில்லிடம் கொடுத்ததற்காக மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது, சோய் சூன் - சில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சோய் மற்றும் அதிபர் பார்க் குன் ஹை இடையேயான நெருக்கமான உறவு குறித்த தகவல் வெளியானதை தொடர்ந்து தென் கொரிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்