ஏழு பேரை கொன்ற ஒருவர் சிறை வைத்திருந்த பெண் மீட்பு

அமெரிக்காவின் தென் கரோலினாவில், சங்கிலியால் கட்டி சிறை வைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணை அதிகாரிகள் மீட்ட பின்னர், அவரை சிறைபிடித்து வைத்திருந்த நபர், தான் 7 பேரை கொலை செய்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption பாலியல் குற்றமிழைத்தவராக பதிவு செய்யப்பட்டுள்ள டோட்டு கோக்ல்ஹெப் ஏழு பேரை கொலை செய்ததை ஒப்பு கொண்டுள்ளார்

அந்தப் பெண் உலோக கொள்கலன் ஒன்றோடு இணைத்து சங்கிலியால் கட்டப்பட்டிருந்தார்.

2003 ஆம் ஆண்டு ஒரு மோட்டார் சைக்கிள் கடை ஒன்றில் நான்கு பேரை சுட்டுக் கொன்றதை டோட்டு கோக்ல்ஹெப் ஒப்புக் கொண்டுள்ளதாக ஸ்பார்தான்பர்க் வட்டார ஷெரீப் சுக் ரைட் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption டோட்டு கோக்ல்ஹெப்பின் இடத்தில் கப்பல் உலோக கொள்கலனின் உள்ளே பெண்ணொருவர் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்

மேலும் இரண்டு பேரை புதைத்திருக்கும் இடத்தையும் அவர் காவல்துறையினரிடம் அடையாளம் காட்டியிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

மீட்கப்பட்ட பெண்ணின் காதலரின் உடலை ஏற்கெனவே கண்டறிந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்