ரக்கா நகரை கைப்பற்ற புதியதொரு தாக்குதல் தொடக்கம்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதிகளின் வலுவிடமாக விளங்கும் ரக்கா நகரை கைப்பற்றும் ஒரு போர் நடவடிக்கையின் தொடக்கத்தை சிரியாவின் வட பகுதியில் இருக்கும் அமெரிக்க ஆதரவு படையினர் அறிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption தீவிரவாதிகளின் கட்டுபாட்டு பகுதிகளில் இருக்கும் குடிமக்கள் அவ்விடத்திலிருந்து சென்றுவிட கிளர்ச்சிப்படை தளபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

சிரியா ஜனநாயக படைப்பரிவுகளால் தொடுக்கப்படும் இந்தத் தாக்குதல், அமெரிக்க வான்வழி தாக்குதலின் ஆதரவோடு நடத்தப்படுகிறது.

இந்த சிரியா ஜனநாயக படைப்பிரிவு, அரேபிய இன ஆயுதப்படையினரை உள்ளடக்கியது. ஆனால், இதில் குர்து இன ஆயுதப்படையினர் அதிகம் உள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption குர்து இன ஆயுதப்படையினர் அதிகமாக இருக்கும் சிரியா ஜனநாயக படைப்பிரிவில் அரேபிய இன ஆயுதப்படையினரும் உள்ளனர்

இது பிரச்சனையாகக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முன்பு அரேபியர்களை விரட்டிவிட்டதாக குர்துக்கள் குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள்.

எனவே, அரேபியர்கள் பெரும்பான்மையாக வாழும் ரக்கா நகரில் குர்துக்கள் முன்னேறுவது வரவேற்கப்படாமல் போகலாம்.