வத்திக்கானில் போப் நடத்திய பூசையில் 1000 சிறைக் கைதிகள்

  • 6 நவம்பர் 2016

வத்திக்கானில் போப் பிரான்சிஸ் நிறைவேற்றிய திருப்பலி பூசையில், ஆயிரம் சிறைக் கைதிகள் கலந்து கொண்டனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்த வழிபாட்டின்போது, எந்தவொரு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை - வத்திக்கான் (கோப்புப்படம்)

இன்றைய சமூகமானது புனர்வாழ்வில் நம்பிக்கையின்றி இருப்பதாக, சிறை ஊழியர்கள், தன்னார்வலர்கள், பாதிரியார்கள் பங்கேற்றிருந்த இந்த திருக்கூட்டத்தில் போப் கூறியிருக்கிறார்.

சட்டத்தை மீறியோர் அதற்கான விளைவை சந்தித்தே ஆக வேண்டும். ஆனால், நம்பிக்கையை ஒருபோதும் கைவிடக் கூடாது என்று அவர் அறிவுறுத்தியிருக்கிறார்,

இந்த வழிபாட்டின்போது, எந்தவொரு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்று வத்திக்கான் தெரிவித்திருக்கிறது.

ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளின் கைதிகள் உள்பட பெரும்பாலும் இத்தாலிய சிறைகளில் இருந்து இந்த சிறைக் கைதிகள் போப் நிறைவேற்றிய பூசையில் கலந்து கொண்டனர்,