இராக்: இரட்டை தற்கொலை குண்டு தாக்குதல்களில் 21 பேர் பலி

  • 6 நவம்பர் 2016

இராக்கின் திகரிட் மற்றும் சமாரா நகரங்களில் நடைபெற்ற இரட்டை தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption சமாராவில் ஒரு மசூதியின் வாகன நிறுத்துமிடம் இலக்கு வைக்கப்பட்டு ஷியா புணித பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர்

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட அவசர மருத்துவ ஊர்திகளை பயன்படுத்தி இந்த இரண்டு தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.

திக்ரிட் நகரில் ஒரு சோதனைச் சாவடியில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்களின் மத்தியில் ஒரு தாக்குதல் நடைபெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஒரு சோதனை சாவடியில் காத்து நின்று கொண்டிருந்த கார்களின் வரிசை தாக்குதலுக்கு உள்ளானது

சமாரா நகரில் நடைபெற்ற தாக்குதல், ஷியா முஸ்லிம்களின் புனித பயணிகள் பயன்படுத்தும் வாகன நிறுத்துமிடத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளது.

10 இரானிய குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த தாக்குதலை தாங்கள் நடத்தியதாக இஸ்லாமிய அரசு குழு கூறியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்