ஐ.எஸ்-இன் சிரிய “தலைநகர்” ரக்காவை இலக்கு வைக்கும் கிளர்ச்சி படையினர்

  • 6 நவம்பர் 2016

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதிகளின் வலுவிடமாக விளங்கும் ரக்கா நகரை கைபற்றும் ஒரு போர் நடவடிக்கையின் தொடக்கத்தை சிரியாவின் வட பகுதியில் இருக்கும் அமெரிக்க ஆதரவு படையினர் அறிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஐ.எஸ். பின்வாங்கி சிரியா செல்வதை தடுக்க, மொசூலில் போர் நடைபெறுகின்ற வேளையில் ரக்காவில் தாக்குதல்

சிரியா ஜனநாயக படைப்பிரிவுகளால் தொடுக்கப்படும் இந்த தாக்குதல், அமெரிக்க வான்வழி தாக்குதலின் ஆதரவோடு நடத்தப்படுகிறது.

இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் அங்கிருந்து பின்வாங்கி சிரியாவுக்கு செல்வதை தடுக்க, இராக்கில் மொசூலில் போர் நடைபெறுகின்ற அதேவேளையில் ரக்காவில் தாக்குதல் தொடங்குவதில் அமெரிக்கா முனைப்போடு உள்ளது.

அமெரிக்கா ஆதரவு அளிக்கின்ற சிரியா ஜனநாயக படைப்பிரிவில் அரேபிய இன ஆயுதப்படையினரும் உள்ளனர்.

ஆனால், இதில் குர்து இன ஆயுதப்படையினர் அதிகம் உள்ளதால், பிரச்சனையாகக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்