"தில்லு முல்லு" அமைப்புகளால் பாதுகாக்கப்படுகிறார் ஹிலரி: டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பின் போட்டியாளரான ஹிலரி, புதிதாக கண்டறியப்பட்ட மின்னஞ்சல்கள் குறித்து எந்த ஒரு வழக்கையும் எதிர் கொள்ளமாட்டார் என்ற எஃப் பி ஐயின் கூற்றை கடுமையாக விமர்சித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

படத்தின் காப்புரிமை Getty Images

மிஷிகனில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணியில், எட்டு நாட்களில் எஃப் பி ஐ, ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் மின்னஞ்சல்களை மறு ஆய்வு செய்திருக்க முடியாது என்று கூறிய ட்ரம்ப், மேலும் ஹிலரி "தில்லு முல்லு" அமைப்பால் பாதுகாக்கப்படுகிறார் என்றும் தெரிவித்தார்.

வருடத்தின் தொடக்கத்தில், ரகசிய தகவல்களை ஹிலரி கையாண்டது குறித்த தங்களது முடிவை எஃப் பி ஐ மாற்றிக் கொள்ளவில்லை என்று நாடாளுமன்றத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார் எஃப் பி ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமி.

எஃப் பி ஐ யின் இந்த முடிவுகள், ஹிலரியின் தேர்தல் கால செல்வாக்குக்கு விளைவிக்கப்பட்ட சேதத்தை சரி செய்ய இயலாத வண்ணம் காலம் தாழ்த்தி வந்திருக்கக்கூடும் என ஜனநாயக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்