வங்கதேசம்: இந்துக்களின் கோவில்கள், வீடுகள் மீது நடந்த தாக்குதல்கள் தொடர்பாக 21 பேர் கைது

கடந்த வாரத்தில், சிறுபான்மை இந்து சமூகத்தினரின் கோவில்கள் மற்றும் வீடுகள் மீது வங்கதேசத்தில்நடந்த தொடர் தாக்குதல்கள் தொடர்பாக, மேலும் 21 பேரை அந்நாட்டின் போலீஸார் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை MUNIR UZ ZAMAN/ AFP
Image caption இந்துக்களின் கோவில்கள், வீடுகள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக நடந்த எதிர்ப்பு பேரணி

முதலில் பிரம்மன்பாரியா மாவட்டத்தில் இந்த வன்முறை ஆரம்பித்த போதிலும், பிரதானமாக இஸ்லாமிய நாடாக உள்ள வங்கதேசம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், இந்து சமூகத்தினர் பதற்றத்தில் உள்ளனர்.

இந்துக்கள் மற்றும் மற்ற மத சிறுபான்மையினர்கள் மீது தாக்குதல்கள் நடப்பது வங்கதேசத்தில் அசாதாரணமானது இல்லையென்றாலும், அண்மையில் நடைபெற்ற இந்து-எதிர்ப்பு வன்முறையின் அளவு வழக்கத்தை விட அதிகமாக இருந்ததாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்