ஹாங்காங் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருவருக்கு சீனா தடை

  • 7 நவம்பர் 2016

ஹாங்காங்கின் உள்ளூர்சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாங்காங் சுதந்திரத்திற்கு ஆதரவான இரண்டு செயற்பாட்டாளர்கள் உறுப்பினர்களாக பதவி பிரமாணம் ஏற்கும் சம்பவத்தில் சீனாவின் உயர்மட்ட நாடாளுமன்ற அமர்வு தலையிட்டு தடைசெய்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption யாவ் வெய்-சிங் மற்றும் சிக்ஸ்துஸ் லியுங் இருவரும் சீனாவிற்கு விசுவாசமாக இருப்பதற்கு மறுத்துள்ளனர்.

சீனாவின் இந்த ஆணையை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாக ஹாங்ஹாங்கின் தலைமை செயலதிகாரி லியுங் ச்சுங்-இங் தெரிவித்திருக்கிறார்.

இந்த செயற்பாட்டாளர்கள் வேண்டுமென்றே தவறுதலாக உறுதிமொழியை வாசித்தும், சுதந்திரத்திற்கு அழைப்பு விடுத்தும் எடுத்துகொண்ட முதல் பதவி பிரமாணம் செல்லாததாக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption ஞாயிறன்று ஆர்பாட்டம் நடத்திய மக்கள் கூட்டத்தை கலைக்க ஹாங்காங் காவல்துறையினர் மிளகு தெளிப்பான்களை பயன்படுத்தினர்

ஹாங்காங் சட்டமன்ற பேரவையின் தலைவர் அவர்கள் உறுதிமொழி எடுக்க இன்னொரு வாய்ப்பு கொடுக்க தீர்மானித்திருந்தார். ஆனால், இந்த சம்பவம் ஹாங்காங் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்னும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை.

ஹாங்காங்கிலுள்ள கருத்து சுதந்திரத்தையும், நீதி அமைப்பின் சுதந்திரத்தையும் சீனா குறைத்து மதிப்பிடுவதாக ஜனநாயக இயக்கம் நம்புகிறது.

சீனாவின் தலையீட்டை எதிர்த்து ஞாயிறன்று ஆர்பாட்டம் நடத்திய மக்கள் கூட்டத்தை கலைக்க ஹாங்காங் காவல்துறையினர் மிளகு தெளிப்பான்களை பயன்படுத்தியுள்ளனார்.

தொடர்புடைய தலைப்புகள்