புதிய இணைய பாதுகாப்பு சட்டத்தை ஏற்றது சீன மக்கள் தேசிய பேரவை

அரசியல் கட்டுப்பாட்டை இறுக்கமாக்கும், இணைய சேவை வழங்குவோருக்கு புதிய கடும் விதிமுறைகளை விதிக்கும் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறுகின்ற ஒரு இணைய பாதுகாப்பு சட்டத்தை சீனாவின் மக்கள் தேசிய பேரவை ஏற்று கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption “பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்துகின்ற” வலையமைப்பு கட்டுமானம் மற்றும் தகவல் அமைப்புக்களை உருவாக்குவது இந்த சட்டத்தில் உள்ளடங்கியுள்ளது

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் அமலாகும் இந்த சட்டம், தேசிய ஒற்றுமையையும், பொருளாதார ஒழுங்கையும் சீர்குலைக்கிற அல்லது சோசலிச அமைப்பை நீக்கிவிட காரணமாகும் தகவல்களை வெளியிடுவதை தடை செய்கிறது.

தனிப்பட்ட விபரங்களையும் வர்த்தக தரவுகளையும் சேகரித்து வைப்பது, மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவளிப்பது ஆகியவைளையும் இணைய நிறுவனங்கள் செய்வதை இச்சட்டம் அவசியமாக்குகிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption நாட்டின் இணைய உள்கட்டுமானத்தை பாதுகாப்பதற்கு தேவையான செயல்பாடுகளை அதிகாரிகள் எடுக்க இந்த சட்டம் உதவும் என்று சீன அரசு கூறுகிறது

குற்றங்களையும், பயங்கரவாதத்தையும் தடுக்க இந்த சட்டம் அவசியம் என்று சீன ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தரவுகளின் பாதுகாப்பு பற்றி வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுடைய கவலைகளை வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்