அமெரிக்க மாகாணமான ஓக்லஹோமாவில் ஐந்து என்ற அளவில் நிலநடுக்கம்

  • 7 நவம்பர் 2016

அமெரிக்க மாகாணமான ஓக்லஹோமாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சில கட்டடங்களின் முகப்பு பகுதி சேதமடைந்துள்ளது. மேலும், துல்சாவின் மேற்குப் பகுதியிலுள்ள குஷ்ஷிங் நகரில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை இந்த நிலநடுக்கமானது தூண்டிவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்க மாகாணமான ஓக்லஹோமாவில் ஐந்து என்ற அளவில் நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்கள் குறித்து எந்த தகவல்களும் இல்லை.

நிலநடுக்கத்தின் அளவு ஐந்து என்ற அளவில் பதிவாகி உள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யும் இந்தப் பகுதியைப் பாதிக்கும் வகையில் அதிக அளவில் ஏற்பட்டு வரும் கடுமையான நிலநடுக்கங்களில் இது சமீபமான ஒன்றாகும்.

ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் அல்லது ஃபிராக்கிங் எனப்படும் இயற்கை எரிவாயு அல்லது மற்ற எரிபொருட்களை எடுப்பதற்காக பாறைகளுக்குள் அதிக அழுத்தத்தில் நீரை பீய்ச்சி அடிக்கும் சர்ச்சைக்குரிய முறை நிலநடுக்கம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று கடந்த ஆண்டு ஓக்லஹோமாவின் புவியியல் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

தொடர்புடைய தலைப்புகள்