யுக்ரெயின் அதிபர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக பதவியை ராஜினாமா செய்த ஜார்ஜியா ஆளுநர்

யுக்ரெயின் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ மீதான ஊழல் குறித்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, ஒடெசா பகுதியின் ஆளுநர் பதவியிலிருந்து தான் ராஜினாமா செய்யப்போவதாக முன்னாள் ஜார்ஜியா அதிபர் மிக்கெயில் சாகாஷ்விலி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிபர் மிக்கெயில் சாகாஷ்விலி

ஒடிசாவில் உள்ள ஊழல் செய்யும் குடும்பங்களை தனிப்பட்ட முறையில் அதிபர் ஆதரித்து வருவதாக சாகாஷ்விலி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், சில யுக்ரெயினிய அரசியல்வாதிகளின் மிகப்பெரிய சொத்துக்கள் குறித்தும் அவர் விமர்சித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம், ஒடெசாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

ஜியார்ஜியாவை சேர்ந்த ஒடெசா காவல்துறை தலைவராக இருந்த கியோர்கி லோர்ட்கிபனிட்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தததை தொடர்ந்து மிக்கெயில் சாகாஷ்விலி இந்த முடிவை எடுத்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்