அளவுக்கு அதிக கடன்களால் ரியோ டி ஜெனிரோ மாநில வங்கிக் கணக்குகள் முடக்கம்

அளவுக்கு அதிகமான பல மில்லியன் டாலர் கடன்களை செலுத்த ஆணையிட்டு ரியோ டி ஜெனிரோ மாநில வங்கிக் கணக்குகளை பிரேசில் அரசு முடக்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஒலிம்பிக் போட்டிகளின்போது பாதுகாப்புக்கு நிதி ஆதரவு வழங்கவும், ஒரு மெட்ரோ தடத்தை கட்டி முடிக்கவும் ரியோவுக்கு மேலதிக நிதி உதவி தேவைப்பட்டது

பல மாதங்களாக அரசுத்துறை அதிகாரிகள் பலருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

உலக அளவில் எண்ணெய் மற்றும் நுகர்பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்ததால், ரியோ டி ஜெனிரோ நீண்டகாலமாக நிதி நெருக்கடியால் போராடி வருகிறது.

ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு சற்று முன்னதாக நிதி அவசரகால நிலையை இம்மாநிலம் அறிவித்தது.

கடந்த வாரம் ஆளுநர் லுய்ஸ் ஃபெர்னாடோ பெஸாவ் ஒரு தொகுதி சிக்கன நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறார்..

இவை ஏற்றுகொள்ளப்படாவிட்டால், அடுத்த ஆண்டு பணியாளர்கள் முழு ஊதியத்தை பெறுவதற்கு இம்மாநிலம் உத்தரவாதம் அளிக்க முடியாமல் போகலாம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்