இஸ்லாமியவாத தீவிரவாதிகள் சேதப்படுத்திய புத்தர் சிலையின் முகம் 9 ஆண்டுகளுக்கு பின் மீட்பு

இஸ்லாமியவாத தீவிரவாதிகளால் சேதப்படுத்தப்பட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர், பாகிஸ்தானின் வட மேற்கில் பாறையில் முற்காலத்தில் செதுக்கிய புத்தர் சிலையின் முகத்தை வெற்றிகரமாக மீட்டு எடுத்திருப்பதாக தொல்லியல் நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஸ்வாட் பள்ளத்தாக்கில் இருக்கும் இந்த சிலையை சரி செய்ய நிபுணர்கள் 5 ஆண்டுகள் செலவிட்டுள்ளதாக இந்த பணி திட்டத்தின் இத்தாலியை தலைவர் டாக்டர் லுகா மரியா ஒலிவியர், டான் செய்தித்தாளிடம் கூறியிருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளை விரட்டியடிப்பதற்கு முன்னதாக இந்த பகுதி தலிபானின் கட்டுப்பாட்டில் சிறிது காலம் இருந்தது.

7 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தியான நிலையில் இருக்கும் இந்த புத்தர் சிலை தெற்கு ஆசியாவில் இருக்கின்ற மிக பெரிய பாறை சிற்பங்களில் ஒன்றாகும்.

பாறையில் செதுக்கப்பட்ட இந்த சிற்பத்தின் முகத்தை சிதைத்தது, உலக அளவில் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

தொடர்புடைய தலைப்புகள்