கடலில் சிக்கியது 66 ஆண்டுகளுக்கு முன் தொலைந்துபோன அமெரிக்காவின் அணுகுண்டா?

  • 10 நவம்பர் 2016

கடல் அட்டைகளைத் தேடி பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு அருகில் ஷாவன் சிமிரிச்ன்ஸ்கி என்பவர் கடலில் முக்குளித்தபோது, பறக்கும் தட்டு போன்ற பெரியதொரு உலோக கருவியை கண்டுபிடித்திருப்பது, 1950 ஆம் ஆண்டு தொலைந்துபோன் அமெரிக்காவின் அணுஆயுதமா என்று ஆராய்கிறார் டொரென்டோ பிபிசி செய்தியாளர் ராபின் லிவின்சன்-கிங்.

வர்த்தக ரீதியில் ஆழ்கடல் முக்குளிப்பவர் ஒருவர் கனடா கடற்கரையின் தொலைதூரத்தில் அமெரிக்க படையால் தவறவிட்ட அணு குண்டை ஒருவேளை கண்டுபிடித்திருக்கலாம்.

கடல் அட்டைகளை தேடி பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு அருகில் ஷாவன் சிமிரிச்ன்ஸ்கி கடலில் முக்குளித்தபோது, பறக்கும் தட்டு போன்ற பெரியதொரு உலோக கருவியை கண்டுபிடித்தார்.

1950 ஆம் ஆண்டு விழுந்து நொறுங்கிய யுஎஸ்பி-36 குண்டுவீச்சு விமானத்திலிருந்து "தொலைந்து போன அணுகுண்டாக" இருக்கலாம் என்று கனடா தேசிய பாதுகாப்பு பிரிவு (டிஎன்டி) நம்புகிறது.

இந்த குண்டு உண்மையிலேயே அணு பொருட்களை உள்ளடக்கியிருப்பதாக கனடா அரசு நம்பவில்லை.

இதுபற்றி ஆராய்ந்து கண்டறிய ஹய்டா ஜிவாய் தீவுக்கூட்டத்திற்கு அருகிலுள்ள அந்த இடத்திற்கு கடற்படை கப்பல்களை அனுப்பியிருக்கின்றனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவுடனான அலாஸ்காவின் எல்லையில் ஹய்டா ஜிவாய்க்கு அருகிலுள்ள பிட் தீவு கடற்கரையின் தொலைதூரத்தில் ஆழ்கடலில் முக்குளித்தபோது, ஷாவன் சிமிரிச்ன்ஸ்கி இந்தக் கருவியைக் கண்டுபிடித்தார்.

அது "பெரிய படுக்கையை விட பெரிதாக" இருந்தது. மேல் பகுதியில் தட்டையாகவும், வட்டவடிவ அடிப்பகுதியும், பாகர் ரொட்டி போல நடுவில் ஓட்டையும் கொண்டிருந்தது என்று பிபிசியிடம் சிமிரிச்ன்ஸ்கி தெரிவித்தார்.

"எதோவொரு விசித்திரமான பொருளைக் கண்டேன். அது அறியப்படாத பறக்கும் பொருள் என்று நினைக்கிறேன்" என்று தன்னுடைய சகாவிடம் கடற்கரைக்கு வந்தபோது அவர் கிண்டலாக தெரிவித்திருக்கிறார்.

அப்பகுதி மிகவும் தொலைவில் இருந்தால், நகருக்கு சென்று ஒருவரை சந்தித்து, அது என்னவென அறிய காத்திருக்க வேண்டியிருந்தது என்று சிமிரிச்ன்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.

அப்பகுதியில் முன்னரே இருந்த அவருடைய நண்பர்களில் ஒருவர் :"1950-களில் அவர்கள் தொலைத்த அணுகுண்டை நீ கண்டுபிடித்திருக்கலாம்" என்று கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை ROYAL AVIATION MUSEUM OF WESTERN CANADA
Image caption தொலைந்து போன அணுகுண்டின் மாதிரி

பின்னணி - கோர்டன் கோரெரா, பிபிசி பாதுகாப்பு செய்தியாளர்

இது திகிலூட்டும் திரைப்படம் போல தோன்றலாம். ஆனால், பனிப்போர் காலத்தில் சிலவேளைகளில் அணு ஆயுதங்கள் தொலைந்து போன விபத்துக்கள் நடைபெற்றுள்ளன.

அது பற்றிய விவரங்கள் முழுமையாக வெளிவருவதற்கு பல ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்னால் வட கிரீன்லாந்துக்கு சென்ற பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் கோர்டன் கோரெரா, 1968 ஆம் ஆண்டு துலே ராணுவ தளத்தை அடைவதற்காக சென்ற அமெரிக்க குண்டுவீச்சு விமானம் தரையில் மோதி நிகழ்ந்த விபத்தை ஆய்வு செய்தார்.

அணு ஆயுதங்களின் பகுதிகள் பனிக்குள்ளே புதையுண்டு போயிருந்தன.

சிறப்பு நீர் மூழ்கிக் கப்பல்கள் சில பகுதிகளை கண்டறிந்தன. ஆனால் அனைத்தையும் கண்டறிய முடியவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இன்னொரு பி-52 குண்டுவீச்சு விமானம் ஸ்பெயினின் பலொமாரஸில் மோதி விபத்திற்கு உள்ளானது.

இதில் மூன்று ஆயுதங்கள் தரையில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், நான்காவது ஆயுதமானது இரண்டு மாதங்களுக்கு மேலாக கடலில் தேடிய பின்னர்தான் அதன் இடத்தை அறிய முடிந்தது.

ஆயுதங்களின் வடிவமைப்பு பற்றிய ரகசியங்கள் கசியாமல் தவிர்ப்பதை ஓரளவு தவிர்க்க, அதற்கு என்ன நடந்து என்பது பற்றி முழுமையாக வெளிப்படுத்தாமல் இருப்பது தான் பனிப்போர் காலத்தின் அணு ஆயுத ரகசியமாக இருந்தது.

உள்ளூர் மக்கள் இதற்கு எவ்வாறு பதிலளிப்பார்கள் என்ற அச்சமும் இதற்கு காரணமாகும்.

படத்தின் காப்புரிமை ROYAL AVIATION MUSEUM OF WESTERN CANADA
Image caption தொலைந்து போன அணுகுண்டை பல ஆண்டுகளாக மக்கள் தேடி வந்துள்ளனர்

50 ஆண்டுகளாக தெலைந்தது - அமெரிக்க அணு குண்டு

தொலைந்துபோன அணுகுண்டு பற்றிய விடயம் அரை நூற்றாண்டாக ராணுவ வரலாற்று ஆசிரியர்களுக்கு மிக பெரிய மர்மமாகவே இருந்த வந்தது.

1950 ஆம் ஆண்டு டெக்ஸாஸ் கார்ஸ்வெல் விமானப்படை தளத்திற்கு வருகின்ற வழியில் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு அருகில் யுஎஸ்பி-36 குண்டுவீச்சு விமானம் 075 விபத்திற்குள்ளானது.

அணு குண்டு தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு ரகசிய நடவடிக்கையாக உண்மையான மார்க் IV அணு குண்டை சுமந்து சென்று, இந்த அணுகுண்டு அளவிலான எடையை சுமந்து செல்ல முடியுமா என்று சோதனை நடைபெற்றது.

பல மணிநேரம் பறந்த பின்னர் அதனுடைய எந்திரங்கள் தீப்பிடித்து விட்டதால், அதில் பயணம் செய்த விமான அணியினர் பாதுகாப்பாக வான்குடை (பாராசூட்) மூலம் தரையிறங்க வேண்டியதாயிற்று. குதித்த 17 பேரில் 5 பேர் பலியாகிவிட்டனர்.

இந்த குண்டு ஈயம், யுரேனியம் மற்றும் டிஎன்டி எனப்படும் ரிநைட்ரோடோலுனே ஆகியவற்றால் நிரப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கும் அமெரிக்க ராணுவம், அதில் புளூட்டோனியம் இல்லை. எனவே, இந்த அணு குண்டு வெடிக்கும் திறனுடையதல்ல என்று கூறியுள்ளது.

அந்த விமானத்தை தானாக இயங்கும் நிலையில் செலுத்தி பெருங்கடலின் நடுவில் மோதும் வகையில் விமான அணியினர் செய்தனர்.

ஆனால், மூன்றாண்டுகளுக்கு பின்னர் 100 கிலோமீட்டருக்கு உள்ளே நிலப்பகுதியில் அதன் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அமெரிக்க அரசு விமானத்தின் உடைந்த பாகங்களை தேடியது. ஆனால், ஆயுதங்களை பெற முடியவில்லை என்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் விமான போக்குவரத்து வரலாற்று ஆசிரியர் டிர்க் செப்டெர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையின் தொலைதூரத்திலுள்ள தீவுக்கூட்டம் ஹய்டா ஜிவாய் தீவுகள்

"இது அனைவருக்கும் ஒரு மர்மமாக இருந்தது என்று பிபிசியிடம் தெரிவித்த அவர், அப்போது பனிப்போர் காலத்தின் உச்சக்கட்டமாக இருந்ததால், ரஷ்யர்கள் அதனை எடுத்துவிடலாம் என்று அமெரிக்கா அச்சமடைந்திருந்த்து.

அந்த குண்டை வெடிக்க செய்தால், டிஎன்டி-யின் தாங்கும் திறனால் அதுவாகவே எதிர்வினை புரியும் என்று அஞ்சி அந்த விமான அணியினர் அந்த குண்டையும் விமானத்தையும் பெருங்கடலில் விழ செய்ததாக தெரிவித்திருக்கின்றனர்.

அமெரிக்காவின் துறையோடு ஒப்பிட்டு பார்த்து இருப்பதாக தெரிவித்திருக்கும் டிஎன்டியின் செய்தி தொடர்பாளர், ஆழ்கடல் முக்குளிப்பவர் கட்டுபிடித்திருப்பது குண்டாக இருக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த குண்டு செயல்பாட்டோடு இருக்கும் என்றோ அல்லது யாருக்காவது அச்சுறுத்தலாக இருக்கும் என்றோ அமெரிக்க ராணுவம் நம்பவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இதனை உறுதி செய்துகொள்ள அவ்விடத்திற்கு ராணுவ கப்பல்களை கனடா அனுப்பியிருக்கிறது.

ராணுவமும், ஆழ்கடல் முக்குளித்தவரும் குண்டு வீச்சு விமானம் பாமர் 075 -தில் தொலைந்துபோன அணு குண்டை கண்டுபிடித்திருப்பதாக நம்புகிற வேளையில், இந்த விமான விபத்து பற்றி நமக்கு தெரிந்தவை வைத்து பார்த்தால் ஆழ்கடல் முக்குளிப்பவர் தெரிவிக்கின்ற இடம் முற்றிலும் தவறானது.

"அது எதுவாகவும் இருக்கலாம். அவர் என்ன கண்டுபிடித்தாரோ அது அணுகுண்டு அல்ல என்று செப்டர் தெரிவிக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்