அனைவரையும் ஆபத்தில் சிக்க வைக்க கூடிய மனிதர் டிரம்ப்: ஹிலரி

அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் கடைசி பேரணி ஒன்றில், தனது போட்டியாளர் டிரம்பை, "கட்டுப்பாடற்ற பீரங்கி போல, அனைவரையும் ஆபத்துக்குள்ளாக்கக்கூடிய வகையில் நடந்து கொள்ளும் நபர்" என்று ஹிலரி விவரித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பென்சில்வேனியாவில், பிரச்சார பேரணி ஒன்றில் லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய ஹிலரி, அமெரிக்காவிற்கு தான் வலிமைவாய்ந்த மற்றும் நிலையான ஒரு தலைவராக இருப்பேன் என்று தெரிவித்தார்.

டிரம்பைக் காட்டிலும் ஹிலரி நான்கு சதவீத புள்ளிகளுடன் முன்னனியில் இருக்கிறார் என்று சமீபத்திய கருத்து கணிப்பு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

இதற்கிடையில், நாட்டின் வளங்களை சுரண்டிய, தோல்வியுற்ற மேலதிகார அரசியல்வாதிகள் என்று அவரால் விவரிக்கப்படுபவர்களை நிராகரிக்க வேண்டும் என்று டிரம்ப் அம்மாநிலத்தின் வாக்காளார்களை வலியுறுத்தினார்.

வேலைவாய்ப்புகளை திரும்பக் கொண்டுவருவதாக உறுதியளித்த அவர், தேர்தலில் தான் வெற்றி பெறப்போவதாகவும் உறுதியுடன் தெரிவித்தார்.