போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் இடம் பெயர்ந்த பெண்களுக்கு பெண் போலிஸ் பாதுகாப்பு

  • 8 நவம்பர் 2016

நைஜீரியாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள முகாம்களில், பெண் போலிஸாரை பணியில் நிறுத்துவது, போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் இடம் பெயர்ந்த பெண்களை பாதுகாப்பாக உணர வைக்கும் என்று நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நைஜீரிய முகாம் (கோப்புப் படம்)

அங்குள்ள பெண்களை பாதுகாப்பு படையினர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிபர் முகமத் புஹாரி, இந்த குற்றசாட்டு குறித்த விசாரணைக்கு ஆணையிட்டுள்ளார்.

நூறு பெண் போலிஸார் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.