அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபைக்கும் வாக்குப்பதிவு

அமெரிக்கஅதிபர் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியுள்ள சூழலில், அமெரிக்க செனட்டில் உள்ள 100 இடங்களில், 34 இடங்களுக்கும் அமெரிக்க மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அமெரிக்க செனட் ( கோப்புப் படம்)

அமெரிக்காவின் புதிய அதிபரால் எந்த அளவு சாதிக்க முடியும் என்பது குறித்து பெரும் தாக்கத்தை இந்த செனட் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தும்.

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்க செனட்டில் குடியரசு கட்சிக்கு ஜனநாயக கட்சியை விட மூன்று இடங்கள் கூடுதலாக இருப்பது, அதற்கு நன்மை விளைவிப்பதாக இருந்தாலும், தற்போது பதவியில் உள்ள அக்கட்சி வேட்பாளர்களில் பலரின் வெற்றி வாய்ப்பு ஆபத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.

மேலும், குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதிநிதிகள் அவையில் உள்ள அனைத்து 435 இடங்களுக்கும் தேர்தல் நடக்க உள்ளது.

அதிபர் தேர்தல் வாக்குப்பதிவுடன் கூடுதலாக, 12 மாநிலங்களில் உள்ள ஆளுநர்களையும் தேர்ந்தெடுக்க அம்மாநில மக்கள் வாக்குப்பதிவு செய்யவுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்