வாக்கு எண்ணிக்கையில் முந்துகிறார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் எனபதை தீர்மானிக்கவுள்ள இறுதி முக்கிய மாநிலங்களில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.

Image caption டொனால்ட் டிரம்ப் (கோப்புப் படம்)

வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், கடும் போட்டி நிலவும் பல மாநிலங்களில் ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு வேட்பாளர்களுக்கும் இடையே நூலிழை இடைவெளியில் கடும் போட்டி நிலவுகிறது.

அமெரிக்க தேர்தல் குறித்து மேலும் படிக்க: முடிவடையும் தருவாயில் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு

இது வரை, கருத்துக் கணிப்புகள் கணித்ததை விட டொனால்ட் டிரம்பின் வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருப்பதை பார்க்க முடிகிறது.

முன்னரே எதிர்பார்க்கப்பட்டபடி, அலபாமா, கென்டக்கி, தெற்கு கரோலினா, இந்தியானா, மேற்கு வர்ஜினியா டெக்ஸாஸ் போன்ற குடியரசு கட்சிக்கு ஆதரவான இடங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி முகத்தில் உள்ளார் என்று ஏபிசி செய்தி நிறுவனம் கணித்துள்ளது.

மிகவும் கடுமையான போட்டி உள்ள மாநிலங்களில் பெரிய மாநிலமான ஃ புளோரிடா மாநிலத்தில், மிக குறைந்த அளவு வித்தியாசத்தில் ஹிலரி கிளிண்டனை விட டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்