மகிழ்ச்சிக் கடலில் டிரம்ப் ஆதரவாளர்கள்

தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பல கணிப்புகளையும் விட சிறப்பான முறையில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.

Image caption டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் (கோப்புப் படம்)

ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு வேட்பளர்களுக்கும் இடையிலான ஆதரவில் ஊசல் நிலையில் உள்ள முக்கிய மாநிலங்களான ஃ புளோரிடா மற்றும் ஒஹையோ ஆகிய மாநிலங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் முன்னிலை தகவல்கள் குறித்து மேலும் படிக்க:

முக்கிய மாநிலங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் டொனால்ட் டிரம்ப்

தொடந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பென்சில்வேனியா உள்பட ஊசல் நிலையில் உள்ள பல முக்கிய மாநிலங்களில் ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு வேட்பளர்களுக்கும் இடையே குறைந்த வித்தியாசமே உள்ளது.

அதனால், டொனால்ட் டிரம்ப்பின் கட்சி தலைமையகத்தில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகமான மனநிலை காணப்படுகிறது.

அதே வேளையில், ஹிலரி கிளிண்டனின் ஆதரவாளர்கள் மனச்சோர்வுடன் காணப்படுகிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வருத்தத்துடன் காணப்படும் ஹிலரியின் ஆதரவாளர்கள்

தொடர்புடைய தலைப்புகள்