வெற்றிக்கு மிக அருகில் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப். அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஆவதற்கான பாதையில் முன்னேறி வருகிறார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption வெற்றிப் பாதையில் முன்னேறும் டொனால்ட் டிரம்ப்

இது அமெரிக்க தேர்தல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

இன்னமும் இறுதி முடிவுகள் இழுபறி நிலையில் இருந்தாலும், இரு முக்கிய வேட்பாளர்களுக்குமான ஆதரவில் ஊசல் நிலையில் உள்ள முக்கிய மாநிலங்களான ஃபுளோரிடா, ஒஹையோ, வடக்கு கரோலினா மற்றும் ஐயோவா மாநிலங்களில் டொனால்ட் டிரம்ப் வென்றுள்ளார்.

டிரம்ப்பின் முன்னிலை தகவல்கள் குறித்து மேலும் படிக்க: முக்கிய மாநிலங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் டொனால்ட் டிரம்ப்

மேலும், அமெரிக்க அதிபராக மிகவும் தேவையான 270 தேர்தல் அவை வாக்குகளை பெறும் போட்டியில் டிரம்ப், ஹிலாரி கிளிண்டனை விட பெரும்பான்மை எண்ணிக்கைக்கு மிக அருகாமையில் உள்ளார்.

இதனால், டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி தென்படுகிறது. அதே வேளையில் ஹிலரி கிளிண்டனின் பிரச்சார தலைமையகத்தில் ஒரு துயரமான சூழல் தவழ்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்