அமெரிக்காவில் ஏறுமுகம் கண்ட பங்குச் சந்தை ஆசியாவில் இறங்குமுகம்

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கபட்டுள்ள செய்தியை வர்த்தகர்கள் கிரகித்துக்கொண்ட சில நிமிடங்களுக்கு பிறகு, நியூயார்க்கில் துவங்கிய வால் ஸ்ட்ரீட்டில் பிரதான டவ் ஜோன்சின் பங்கு குறியீடு சற்று அதிகரித்து வர்த்தகம் தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

தேர்தலை தொடந்து, டிரம்பின் வர்த்தகத்திற்கு ஆதரவான நிகழ்ச்சி நிரல் சந்தையில் ஸ்திரமின்மையை தோற்றுவித்திருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

லண்டனிலுள்ள முக்கிய இரண்டு பங்குச் சந்தைகளும், பிராங்ஃபர்ட் பங்கு சந்தையும் கூட ஏற்றமடைந்திருக்கின்றன.

இருப்பினும் முக்கியமாக டோக்கியோவிலுள்ள நிக்கியின் குறியீடு 5 சதவீதத்திற்கு மேலாக வீழ்ச்சிடைந்ததோடு, ஆசிய பங்குச் சந்தைகள் இந்த தேர்தல் முடிவுகளால் இறங்குமுகம் கண்டுள்ளது,

தொடர்புடைய தலைப்புகள்