டிரம்பின் தேர்தல் வெற்றிக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்

  • 10 நவம்பர் 2016

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அடுத்த அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல அமெரிக்க நகரங்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

Image caption கோப்புப் படம்

நியூ யார்க்கில் உள்ள டிரம்ப் டவர்ஸ் கட்டடத்திற்கு எதிரில் தற்போது கூடியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள், குடியேற்றம், ஆண் ஒரு பால் உறவுக்காரர்களின் உரிமைகள் மற்றும் இனப்பெருக்க உரிமைகள் போன்ற அம்சங்களில் டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

நேற்று (புதன்கிழமை) டொனால்ட் டிரம்பின் அதிபர் தேர்தல் வெற்றி உறுதி செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே, கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள நகரங்களில் கூடிய நூற்றுக்கணக்கான மக்கள் ' இவர் எனது அதிபர் அல்ல' என்று குரலெழுப்பி தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்